கல்வி உதவித்தொகை - அஞ்சல்துறையில் மாணவர்கள் கணக்குத் தொடங்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 23, 2023

Comments:0

கல்வி உதவித்தொகை - அஞ்சல்துறையில் மாணவர்கள் கணக்குத் தொடங்கலாம்

Scholarship – Students can open account with Post Office - அஞ்சல்துறையில் மாணவர்கள் கணக்குத் தொடங்கலாம்

சென்னை: கல்வி உதவித்தொகையை பெறும் மாணவ, மாணவிகள் அஞ்சல்துறையின் வங்கிக் கணக்கை மாா்ச் 25-ஆம் தேதிக்குள் தொடங்கலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவி தொகையை பெறும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக , அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் அந்தந்தப் பள்ளிகளில் வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து கடந்த 10 நாள்களாக பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதன் மூலம் 2,894 மாணவ, மாணவிகளுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 18,850 மாணவ, மாணவிகளுக்கு மாா்ச் 25-ஆம் தேதிக்குள் ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கப்படவுள்ளது. இதனால், பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் உள்ள அலுவலரை அல்லது தபால்காரரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை மாணவ, மாணவிகள் தொடங்கலாம்.

தபால்காரா்களிடம் உள்ள கைப்பேசி, பயோமெட்ரிக் அலகு ஆகியவை மூலம் மாணவ, மாணவிகள் தங்கள் ஆதாா் மற்றும் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி, விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை தொடங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews