50,000 பேரு தமிழ் பரிட்சை எழுதல. . . 49,000 பேரு இங்கிலீசு பரிட்சை எழுதல. . . ஏன்னு தெரியுமா?. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 16, 2023

Comments:0

50,000 பேரு தமிழ் பரிட்சை எழுதல. . . 49,000 பேரு இங்கிலீசு பரிட்சை எழுதல. . . ஏன்னு தெரியுமா?.

50,000 பேரு தமிழ் பரிட்சை எழுதல. . . 49,000 பேரு இங்கிலீசு பரிட்சை எழுதல. . . ஏன்னு தெரியுமா?. . . .

என்று ஏகத்திற்கு உருட்டு உருட்டுனு உருட்டி காட்சி - அச்சு - சமூக ஊடகங்களில் கருத்து சொல்லக் கிளம்பியுள்ள பள்ளிகளின் இன்றைய கற்றல் கற்பித்தல் சூழலை அறியாத, வகுப்பறைகளின் நிலையை உணராத, கல்விக் கருத்தாளர்களிடம் பின்வரும் கேள்விகளுக்குப் பதில் உள்ளதா? தேர்வு எழுத வராத அந்த 50,000 குழந்தைகளில்,

1. மாணவர்கள் எத்தனை பேர்?

2. மாணவிகள் எத்தனை பேர்?

3. கிராமப்புறத்தினர் எத்தனை பேர்?

4. நகர்ப்புறத்தினர் எத்தனை பேர்?

5. அவர்களின் பொருளாதாரச் சூழல் என்ன?

6. அவர்களின் சமூகச் சூழல் எப்படிப்பட்டது?

7. அவர்கள் எதிர்கொண்ட அனுதினப் பிரச்சினைகள் என்னென்ன?

8. கல்வி பற்றி அவர்களது பெற்றோரின் நிலைப்பாடு என்ன?

9. அவர்களின் பள்ளி வருகை % என்ன?

9. காலாண்டு, அரையாண்டு & திருப்புதல் தேர்வுகளில் அவர்களின் நிலை என்ன?

10. தேர்வு நாளன்று அவர்களின் உடல்நிலை எப்படி இருந்தது?

11. சார்ந்த பள்ளிகளில் தொடர்ந்து 2 ஆண்டுகளாகப் பணியிலுள்ள PG ஆசிரியர்கள் எத்தனை பேர்?

12. சார்ந்த பள்ளிகளில் தொடர்ந்து 2 ஆண்டுகளாகப் பணியிலுள்ள தலைமை ஆசிரியர்கள் எத்தனை பேர்?

13. சார்ந்த பள்ளிகளில் பெருந்தொற்று ஊரடங்கு காலத்திற்கு முந்தைய செயல்பாடுகள் எப்படிப்பட்டது?

14. கடந்த இரு ஆண்டுகளில் சார்ந்த பள்ளிகளின் உட்கட்டமைப்பு எப்படி உள்ளது?

15. அம்மாணவர்கள் பற்றி சார்ந்த பள்ளிகளின் பாட ஆசிரியர்களின் மதிப்பீடு என்ன?

இப்புடியே இன்னும் சில கேள்விகளும் இருக்கு. இருந்தாலும் இத்தோடே ஒரே ஒரு முக்கிய கேள்வி மட்டும். . .

16. அம்மாணவர்களில் எத்தனை நபர்களை எப்போது நேரில் சந்தித்து அவர்கள் தேர்வெழுத வராததன் காரணத்தைக் கேட்டறிந்தீர்கள்?

மெய்யாகவே இவ்விடயத்தில் மாணவர் நலனில் அக்கறையோடுதான் நாம் நமக்குத் தெரிந்த காரணங்களைப் பகிர்கிறோம் என்றால். . . . மேலேயுள்ள 16 கேள்விகளுக்குமான விடையை நாம் அறிந்திருக்க வேண்டியது முக்கியம். அரசுத் தேர்வுகள் துறை அலுவலர்கள் ஆர்வக்கோளாறில் வெளியிட்டு வரும் எண்ணிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் காரணங்களை அடுக்குவோமெனில். . . . அவை உண்மையான காரணங்களாக இல்லாது நமது சுய சிந்தையின் கற்பனையாகவோ / கடந்த கால நிகழ்வுகளின் அனுபவப் பகிர்வாக மட்டுமே இருக்கக்கூடும்.

இது நமது கற்பனைகளால் கட்டவிழ்க்கக்கூடிய விடுகதை அல்ல. கள ஆய்வின் வழியே தீர்வு காண வேண்டிய காலத் தேவை. ஏனெனில், இன்றைய தேதியில் இது 50,000 குடும்பங்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடியது.

ஆகையால். . . ஏற்ற சூழல் இருக்குமெனில் ஆக்கப்பூர்வமா செயல்படுவோம்! இல்லையா ஆக்கப்பூர்வமா செயல்பட அரசை நிர்பந்திப்போம்!!

அப்புறம். . . ஏன்ட்டயும் இந்தக் கேள்விகளில் எதுக்குமே பதில் இல்ல.

இதைவிட ஆழமான வினாக்களோடே, தீர்வு காண வேண்டுமென்ற சிந்தையோடே சிரத்தையோடே அரசுதான் ஆய்வு செய்தாக வேண்டும். ஏனெனில் அதற்குண்டான அனைத்துவித கட்டமைப்பும் அரசிடம் மட்டுமே உள்ளது. அல்லது அத்தகைய கட்டமைப்புள்ள அரசு சாரா தன்னார்வ அமைப்புகளும் ஆய்வு செய்ய முன்வரலாம். . . . கல்விக் கருத்தாளர்களின் உருட்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு.

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews