விண்ணில் ஒரு அதிசயம்: வரிசையாக வரப்போகும் 5 கிரகங்கள் - நாளை மாலை விண்ணில் ஒரு அதிசயம் நிகழப்போகிறது. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 27, 2023

Comments:0

விண்ணில் ஒரு அதிசயம்: வரிசையாக வரப்போகும் 5 கிரகங்கள் - நாளை மாலை விண்ணில் ஒரு அதிசயம் நிகழப்போகிறது.

விண்ணில் ஒரு அதிசயம்: வரிசையாக வரப்போகும் 5 கிரகங்கள்.

நாளை மாலை விண்ணில் ஒரு அதிசயம் நிகழப்போகிறது.

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றும் நிகழ்வு நடக்க உள்ளது.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மேற்கு தொடுவானில் கவனித்தால் இதனை பார்க்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது.

வானில், தொடுவானம் தொட்டு பாதி வானம் வரை இந்த 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும்.

சூரியன் மறைந்த அரைமணி நேரத்திலேயே, புதனும், வியாழனும் தொடுவானத்துக்கு கீழே புதைந்துவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். உலகின் எந்த பகுதியில் இருந்தும் இந்த 5 கிரக வரிசையை காண முடியும்.

5 கிரகங்கள் வரிசையில் தோன்றுவதை, பார்க்க பைனாக்குலர் தேவைப்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால், அதனை ஓரளவு காண முடியும்.

வெள்ளி மிகவும் பிரகாசமாக இருக்கும். செவ்வாய் கிரகம், நிலவுக்கு அருகில் சிவப்பாய் ஒளிரும். ஆனால் புதனும், யுரேனசை கண்டுபிடிப்பதுதான் கொஞ்சம் சிரமம்.

வெள்ளிக்கு மேலே அது, பச்சையாக மிளிரும் இதனால், பைனாகுலர் இருந்தால் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews