“நான் முதல்வன்” - போட்டித் தேர்வுகள் பிரிவு தொடக்கம் - செய்தி வெளியீடு எண்‌ : 479 நாள்‌ : 07.03.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 07, 2023

Comments:0

“நான் முதல்வன்” - போட்டித் தேர்வுகள் பிரிவு தொடக்கம் - செய்தி வெளியீடு எண்‌ : 479 நாள்‌ : 07.03.2023

“நான் முதல்வன்” - போட்டித் தேர்வுகள் பிரிவு, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. திரு. உதயநிதி ஸ்டாலின்‌ அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்.
செய்தி வெளியீடு எண்‌ : 479 நாள்‌ : 07.03.2023 செய்தி வெளியீடு
"நான்‌ முதல்வன்‌ திட்டம்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவு மாண்புமிகு இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌ அவர்கள்‌ சென்னையில்‌ தொடங்கி வைத்தார்‌.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ தொடங்கப்பட்ட மாபெரும்‌ திறன்‌ மேம்பாட்டிற்கான "நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவு" தொடக்க நிகழ்ச்சி இன்று (07.03.2023) சென்னை, கோட்டூர்‌ புரத்தில்‌ உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்‌ நடைபெற்றது. "நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ - போட்டித்தேர்வுகள்‌ பிரிவின்‌ கீழ்‌ அரசுத்‌ தேர்வுகளான எஸ்‌.எஸ்‌.சி (8850), ரயில்வே (௩௧100௧, வங்கி ௩௧006) மத்திய 050), தமிழ்நாடு அரசுப்பணி (11௩50) இராணுவம்‌ (பமா) போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும்‌ சிறந்த முறையில்‌ பயிற்றுவிக்கும்‌ வகையில்‌ இத்திட்டம்‌ துவங்கப்பட்டுள்ளது.

இப்போட்டித்தேர்வு பிரிவில்‌ மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள்‌ மற்றும்‌ பயிற்சி வகுப்புகள்‌ இலவசமாக வழங்கப்படும்‌. இதன்மூலம்‌ தமிழ்நாட்டு இளைஞர்கள்‌ போட்டித்‌ தேர்வுகளை எளிதாக அணுகும்‌ வண்ணம்‌ அஇப்போட்டித்‌ தேர்வு பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

அரசுப்பணி ஒன்றையே கனவாகக்‌ கொண்டுள்ள ஆயிரம்‌ ஆயிரம்‌ இளைஞர்களின்‌ கனவை மெய்ப்படுத்துவதே இத்திட்டத்தின்‌ நோக்கம்‌.மத்திய அரசுப்‌ பணி போட்டித்தேர்வுகளில்‌ தமிழர்களின்‌ பங்கேற்பை கணிசமான அளவில்‌ அதிகரித்து வெற்றி பெறச்‌ செய்வதோடு மட்டுமல்லாமல்‌ கூடிய விரைவில்‌ ஐஐடி (1), என்‌.ஐ.டி), தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள்‌ காட பகர பங, அகில இந்திய மருத்துவ நிறுவனம்‌ (ம ஈக ஙஊாபாட ௦ நா£பக&ட 50௨05), ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களில்‌ ஆயிரக்கணக்கான தமிழ்‌ இளைஞர்கள்‌ பயிலும்‌ வண்ணம்‌ குமரி முதல்‌ இமயம்‌ வரை நம்‌ அறிவை விரிவு செய்ய இத்திட்டம்‌ விசாலப்‌ பாதை வகுக்கும்‌ என்ற நோக்கத்தையும்‌ கொண்டு "நான்‌: முதல்வன்‌"போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை மாண்புமிகு இளைஞர்நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று தொடங்கி வைத்தார்‌.
நிகழ்ச்சியில்‌ மாண்புமிகு அமைச்சர்‌ அவர்கள்‌ பேசும்‌ போது கூறியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்த "நான்‌ முதல்வன்‌: " திட்டத்தின்‌ ஒரு பகுதியான போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவை தொடங்கி வைப்பதில்‌ பெருமகிழ்ச்சி அடைகிறேன்‌. வாழ்க்கையில்‌ சாதிக்க வேண்டும்‌ என்ற துடிப்போடும்‌ , கனவோடும்‌ வந்திருக்கின்ற உங்களை சந்திப்பதில்‌ மகிழ்ச்சி. பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு நவீன பாடப்பிரிவுகளில்‌ பயிற்சிகள்‌ வழங்கி அவர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகள்‌ கிடைக்க வேண்டும்‌ மற்றும்‌ ஆண்டு தோறும்‌ 1௦- இலட்சம்‌ இளைஞர்கள்வேலை வாய்ப்புகளை பெற வேண்டும்‌ என்ற தொலைநோக்குடன்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ துவங்கப்பட்ட ஓராண்டில்‌ 483- அரசு, அரசு உதவி பெறும்‌, சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகள்‌ மூலம்‌ 4- இலட்சத்து 60-ஆயிரம்‌ மாணவ- மாணவியர்கள்‌ மற்றும்‌ 785- கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளைச்‌ சார்ந்த 8- லட்சத்து 10-ஆயிரம்‌ மாணவ- மாணவியர்களுக்கு தொழில்‌ சார்ந்த திறன்களில்‌ பயிற்சிகள்‌ அளிக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பள்ளிக்‌ கல்வி இடை நிற்றலை அறவே ஒழித்திட 1-முதல்‌ 5- வரையிலான அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்‌ திட்டத்தினை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்‌.

நான்‌ ,மாவட்டங்களுக்கு செல்லும்‌ போது அந்தந்த பகுதியிலுள்ள பள்ளிகளில்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்திட்டத்தினை ஆய்வு செய்து வருகிறேன்‌. அங்கு உணவு தரமாக குறித்த நேரத்தில்‌ வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுடன்‌ கேட்டறிந்து ,எனது காலை சிற்றுண்டியினை அவர்களுடன்‌ அமர்ந்து சாப்பிட்டு வருகிறேன்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ திராவிட மாடல்‌ ஆட்சியில்‌ புதுமைப்பெண்‌ திட்டம்‌, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம்‌ சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தில்‌ இதுவரையில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள மகளிர்‌ 250- கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்‌. கடந்த 5-ஆண்டுகளில்‌ வங்கி, இரயில்வே , போன்ற துறைகளுக்கான போட்டித்‌ தேர்வுகள்‌ நடத்தப்பட்டு 1.50 இலட்சம்‌ காலிப்பணியிடங்கள்‌ நிரப்பப்பட்டுள்ளன. இதில்‌ தமிழ்நாட்டைச்சார்ந்தவர்கள்‌ மிகவும்‌ குறைவு என்பது வருத்தமளிக்கிறது.ஒந்த நிலை மாற வேண்டும்‌, மாற்றப்பட வேண்டும்‌ அண்மையில்‌ ஒன்றிய பிரதமர்‌ அவர்களை சந்தித்த போது தமிழ்நாட்டில்‌ ஒன்றிய அரசுப்பணிகளில்‌ தமிழ்நாடு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தியுள்ளேன்‌.

தமிழ்நாட்டில்‌ உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில்‌ அனைத்து நிலைகளிலும்‌ தமிழர்கள்‌ அதிக அளவில்‌ பணியாற்றுகின்ற நிலை வர வேண்டும்‌. சென்னை போன்ற நகரங்களில்‌ மட்டுமே அரசுப்பணிகளுக்கான போட்டித்‌ தேர்வு மையங்கள்‌ உள்ளன. கிராமப்புற மாணவர்களால்‌ கூடுதல்‌ கட்டணம்‌ செலுத்தி இத்தகைய பயிற்சிகளை பெற முடியாது. இந்த நிலையை மாற்றி கட்டணமின்றி போட்டித்‌ தேர்வுக்கான பயிற்சிகளை அளித்திட நம்‌ முதல்வர்‌ அவர்கள்‌ இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்கள்‌. தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஏற்கெனவே மாணவர்களுக்கு தெரிவித்தவாறு, எதைப்பற்றியும்‌ கவலைப்பட வேண்டாம்‌, உங்களுக்கு தாயாக , தந்தையாக துணை நிற்பார்‌. உழைத்தால்‌ வெற்றி பெறலாம்‌. நான்‌ என்றும்‌ உங்களின்‌ அண்ணனாக துணை நிற்பேன்‌ எனக்கூறினார்‌/ இந்நிகழ்ச்சியில்‌ மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர்‌ முனைவர்‌ கே. பொன்முடி அவர்கள்‌, மாண்புமிகு தொழிலாளர்‌ நலன்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு. சி.வி.கணேசன்‌ அவர்கள்‌, சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அரசு முதன்மைச்‌ செயலர்‌ திரு. உதயச்சந்திரன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்கதழக மேலாண்மை இயக்குநர்‌ திருமதி. இன்னசென்ட்‌ திவ்யா க.ஆ.ப., அவர்கள்‌, வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறை இயக்குநர்‌ திரு.கொ. வீரராகவ ராவ்‌ இ.ஆ.ப., போட்டித்‌ தேர்வு பிரிவு தனித்திட்ட இயக்குநர்‌ திரு. சுதாகரன்‌ ஐ.ஆர்‌.பி., எஸ்‌ உள்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.
CLICK HERE TO DOWNLOAD 1
CLICK HERE TO DOWNLOAD 2

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews