மாணவர்களின் கல்வி கட்டணத்தில் முறைகேடு; நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 11, 2023

Comments:0

மாணவர்களின் கல்வி கட்டணத்தில் முறைகேடு; நீதிமன்றம் உத்தரவு

மாணவர்களின் கல்வி கட்டணத்தில் முறைகேடு; நீதிமன்றம் உத்தரவு - Irregularities in students' tuition fees; Court order

மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை பெற்று முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்ட ஒய்எம்சிஏ கல்லூரியின் திட்ட செயலாளரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஒய்எம்சிஏ கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணமாக ரூ.1 கோடியே 69 லட்சத்து 59,137 வசூல் செய்யப்பட்டது. இந்த தொகையில் ரூ. 1 கோடியை கல்லூரியின் திட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த பால் தாமஸ் ஆக்சிஸ் வங்கியில் டெபாசிட் செய்யதாகவும், மீதமுள்ள தொகையை கல்லூரி செலவு செய்ததாகவும் கணக்கு காட்டியுள்ளார்.

இதில் முறைகேடு நடந்ததாக கல்லூரியின் தாளாளர் பெஞ்சமின் பிராங்கிளின மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதாத கூறப்பட்ட ரூ.1 கோடிக்கான டிடி ரத்து செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, ஒரு கோடியே 69 லட்சத்து 59,137 ரூபாயை கையாடல் செய்ததாக கல்லூரி சேர்மன் லிபி பிலிப் மேத்யூ, செயலாளர் கோசி மேதியூ, திட்ட செயலாளர் பால்சன் தாமஸ், ஊழியர்கள் மலர்விழி, ரூபாதேவி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த இளங்கோவன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பால்சன் தாமஸ் 2022 டிசம்பர் 26ல் கைது ெசய்யப்பட்டார்.

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பால்சன் தாமஸ் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, விசாரணை தொடர்ந்து நடந்துவருவதால் ஜாமீன் வழங்ககூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, பால்சன் தாமஸின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews