சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பாக இருப்பது எப்படி? WhatsApp விளக்கம் How to stay safe on social media? WhatsApp description
உலக இணைய பாதுகாப்பு நாளினை முன்னிட்டு, இணையதளத்தில் பயனாளர்கள் எவ்வாறு தங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 7ஆம் தேதி இணைய பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி வாட்ஸ்ஆப், எவ்வாறு சமூக வலைத்தளப் பக்கங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளது. மோசடிகளை எவ்வாறு கண்டறிவது மற்றும் தனிப்பட்ட தகவல்களை மோசடியாளர்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த வழிகாட்டுதலைக் கொண்டிருக்கிறது.
வாட்ஸ்ஆப்பின் பயனர் வழிகாட்டியானது, ஆன்லைனில் இருக்கும் சிக்கல்களை எடுத்துரைப்பதோடு, நாம் உறங்க வேண்டிய நேரத்தில் கூட உறங்காமல், அதிக நேரம் விழித்திருந்து நமது பொன்னான நேரத்தை ஆன்லைனில் அல்லது நமது செல்லிடப்பேசிகளில் செலவிடுவதால், நமது பாதுகாப்பை அது உறுதி செய்ய உதவுகிறதாம்.
அதற்காக, அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் எளிமையான, பயனுள்ள தீர்வுகளை வழங்குவதாகவும் கூறுகிறது. பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் எதையும் அதாவது முகவரி, செல்லிடப்பேசி எண், டெபிட்/கிரெடிட் கார்டு எண், வங்கிக் கணக்கு எண் போன்றவற்றை பகிரக் கூடாது.
தனிநபர் தங்களது புரொஃபைல் பிக்சர், கடைசியாக ஆன்லைன் வந்தது, ஆன்லைன் டேட்டஸ், தங்களைப் பற்றி, ஸ்டேட்டஸ் என அனைத்தையும் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதில், செல்லிடப்பேசி எண் நம்மிடம் இருக்கும் கான்டாக்ட் ஒன்லி அல்லது யாருமே பார்க்கக் கூடாது என்பதை கிளிக் செய்து கொள்ளலாம்.
நீங்கள் ஆன்லைன் வந்தால் அது யாருக்கெல்லாம் தெரிய வேண்டும், தெரியக் கூடாது என்பதையும் தனிநபர்கள் பாதுகாப்பாக அமைத்துக் கொள்ளலாம். வாட்ஸ்ஆப் பயனாளர்கள் வேண்டுமென்றால் டிரண்டு அடுக்கு வெரிஃபிகேஷனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை உங்கள் செல்லிடப்பேசி திருட்டுப் போனால் இது பயன்படும்.
ஃபார்வார்டு ஆகும் அனைத்துத்தகவல்களையும் உண்மைதானா என்பதை அறியாமல் மற்றவர்களுக்கு பகிர்வதைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை வாட்ஸ்ஆப் கொண்டு வந்திருக்கிறது. எனவே, உண்மை என்று தெரியாத எதையும் யாரும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறது.
ஒருவேளை மோசடியான தகவல்கள் ஏதேனும் வந்தால் அது பற்றி பயனாளர்கள் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற மோசடித் தகவல்களுடன் ஒரு லிங்க் இணைக்கப்படும். அதனை கிளிக் செய்தால் உங்கள் அனைத்துத் தகவல்களும் திருடப்படும் அபாயம் உள்ளது. அந்த தகவல்கள் வரும் எண்ணை தொடர்ந்து அழுத்தினால் பிளாக் அண்ட் ரிப்போர்ட் என்று வரும் அதனை தேர்வு செய்யவும்.
போலி செய்தியா? எப்படி கண்டுபிடிப்பது?
இந்தியாவில் மட்டும் 10 உண்மை கண்டறியும் அமைப்புகள் வாட்ஸ்ஆப்பில் உள்ளன. எனவே, அதன் மூலம், நமக்கு வரும் தகவல்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். போலியான தகவல்களை பகிராமல் தடுக்கலாம். போட்டோ, விடியோ, குரல் பதிவு என எது பற்றியும் உண்மை கண்டறிந்த பிறகே அதனை முழுமையாக நம்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.