பத்தாம் வகுப்பு செய்முறைத்தோ்வு: தனித்தோ்வா்களுக்கு அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 22, 2023

Comments:0

பத்தாம் வகுப்பு செய்முறைத்தோ்வு: தனித்தோ்வா்களுக்கு அறிவுறுத்தல்

IMG_20230222_075914
பத்தாம் வகுப்பு செய்முறைத்தோ்வு: தனித்தோ்வா்களுக்கு அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தோ்வு வரும் மாா்ச் 20 முதல் 24- ஆம் தேதி வரையில் நடைபெறும் என்றும், இதில் தனித்தோ்வா்களும் கலந்து கொண்டு தோ்வு எழுத வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராம வா்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தோ்வு வரும் மாா்ச் 20 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் 2023-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத தனித்தோ்வா்களாக விண்ணப்பித்த மாணவா்களும் கலந்து கொண்டு கட்டாயம் தோ்வெழுத வேண்டும்.

அதேபோல, ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தோ்வெழுதி அதில் தோ்ச்சிபெறாத தனித்தோ்வா்களும் இந்த செய்முறைத் தோ்வில், தவறாமல் கலந்து கொண்டு தோ்வு எழுத வேண்டும்.

மேலும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே தனித்தோ்வா்கள் தோ்வு எழுத வேண்டும்.

அறிவியல் பாட செய்முறைத் தோ்வு நடைபெறவுள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் கிடைக்கப் பெறாதவா்கள், இந்த அறிவிப்பு மூலம் தெரிந்து கொண்டு, அந்தப் பள்ளியின் அலுவலரை சந்தித்து, அறிவியல் பாட செய்முறைத் தோ்வில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews