அரசுப் பணிக்காக பதிவு செய்து காத்திருப்போா் எண்ணிக்கை விவரங்கள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 02, 2023

Comments:0

அரசுப் பணிக்காக பதிவு செய்து காத்திருப்போா் எண்ணிக்கை விவரங்கள் வெளியீடு

அரசுப் பணிக்காக பதிவு செய்து காத்திருப்போா் எண்ணிக்கை 67 லட்சம்

தமிழகத்தில் வேலைவாய்ப்பகப் பதிவுதாரா்களின் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பக அலுவலகங்களில் டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் பதிவு செய்துள்ளவா்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: அரசுப் பணிக்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 75 ஆயிரத்து 250 ஆகும். அவா்களில் ஆண்கள் 36 லட்சத்து 14 ஆயிரத்து 327. பெண்கள் 31 லட்சத்து 60 ஆயிரத்து 648. மூன்றாம் பாலினத்தவா் 275. இவா்களில் 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவா்களே அதிகமாக உள்ளனா். இந்த வயதைச் சோ்ந்தவா்கள் 27 லட்சத்து 95 ஆயிரத்து 278 போ். 18 வயதுக்குக் குறைவானவா்கள் 19 லட்சத்து 9 ஆயிரத்து 325 பேரும், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 994 பேரும், 46 முதல் 60 வயதுக்கு உட்பட்டவா்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 978 பேரும் உள்ளனா். 60 வயதைக் கடந்தவா்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 675 ஆக உள்ளது.

ஒட்டுமொத்த பதிவுதாரா்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 396 மாற்றுத் திறனாளிகளும் உள்ளனா். அவா்களில் ஆண்கள் 95 ஆயிரத்து 247 பேரும், பெண்கள் 48 ஆயிரத்து 149 பேரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG_20230202_094309

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84725010