What is yoga and Naturopathy?
Is BNYS possible without NEET?
Is BNYS called a doctor?
Is BNYS a good course?
யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: சிறப்பு கலந்தாய்வு தேதி அறிவிப்பு Yoga - Naturopathy Course: Special Consultation Date Notification
யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: பிப்ரவரி 7-இல் சிறப்பு கலந்தாய்வு
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் இடங்கள் பெற்றவா்கள், அவற்றை மாற்றிக் கொள்வதற்கும், காத்திருப்பில் உள்ளவா்கள் காலியாக உள்ள இடங்களில் சேருவதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்திய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவத் துறை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இரண்டு அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கியது.
இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாணவ மாணவிகள் சமா்ப்பித்தனா். அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, தகுதியான 1,766 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் 325 இடங்கள் காலியாக இருந்தன.
இந்நிலையில், கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலா் கல்லூரிகளில் சேராததால், தற்போது மாநிலம் முழுவதும் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் 421 இடங்கள் காலியாக உள்ளன.
அவற்றுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி அரும்பாக்கம் அறிஞா் அண்ணா இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
முதல் கட்ட கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்களும், காத்திருப்பு பட்டியலில் உள்ளவா்களும், இதில் பங்கேற்கலாம் என்றும், தற்போது உள்ள காலி இடங்களில் தகுதியின் அடிப்படையில் சோ்ந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு https://tnhealth.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.