ITK மாணவர்களுக்கு குறும்படம் போட்டி Short film competition for ITK students
இல்லம் தேடி கல்வி மையங்களில், மாணவர்கள் வழியே குறும்படம் தயாரிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வியின் இல்லம் தேடி கல்வி திட்ட மாநில அலுவலகத்தில் இருந்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:
பள்ளி கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வி மையங்கள், ஓராண்டுக்கு மேல் செயல்படுகின்றன.
இந்த மையங்களில் படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல், சிந்திக்கும் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில், குறும்பட கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.
இந்த மாதம், 'சிட்டுக்களின் குறும்படம்' என்ற நிகழ்வு நடக்க உள்ளது. மாணவர்கள் வழியே, 3 நிமிட குறும்படம் தயாரிக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல், எனது ஊர், குழந்தைகள் பாதுகாப்பு, தன் சுத்தம் உள்ளிட்ட தலைப்புகளில், குறும்படம் தயாரிக்க வேண்டும். குறும்படத்துக்கான கதைக்களத்தை குழந்தைகளே தயார் செய்ய வேண்டும். அதை படம் பிடிக்க, தன்னார்வலர்களின் மொபைல் போனை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு மையம், ஒரு குறும்படத்தை மட்டுமே தயாரிக்க வேண்டும்.
கதையமைப்பின் புதுமை, கதை சொல்வதில் சுவாரஸ்யம், கதாபாத்திர அமைப்பு, வசனங்களின் நேர்த்தி, படமாக்கப்பட்ட முறை, படத்தொகுப்பு முறை மற்றும் இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றுக்கு ஏற்ப, அதிகபட்சம் தலா, 2 மதிப்பெண் வழங்க வேண்டும்.
வட்டார அளவில், ஐந்து சிறந்த குறும்படங்கள்; அவற்றில் இருந்து மாவட்டத்தில், ஐந்து சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்படும்.
இந்த நடவடிக்கைகளை விரைந்து முடித்து, மாவட்ட அளவில் தேர்வான படங்களை, மார்ச், 3க்குள் இல்லம் தேடி கல்வி திட்ட மாநில அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.