உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள்: பிப்.10-க்குள் ஆதாரை சமர்ப்பிக்க அறிவுறுத்தல் PWDs receiving scholarship: Instructions to submit Aadhaar by Feb.10
சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம்மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறும்பயனாளிகளில் இதுவரை ஆதார் அட்டை விவரங்களைச் சமர்ப்பிக்காத அனைத்துமாற்றுத் திறனாளிகளும் வரும்பிப்.10-க்குள் தங்களின் ஆவணங்களான மாற்றுத் திறனாளி தேசியஅடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண், யுடிஐடி அட்டை, மருத்துவச் சான்று, புகைப்படம் ஆகியவற்றை சிறப்பு பள்ளிகளில் வழங்க வேண்டும்.
திருவொற்றியூர் மண்டலத்துக்கு திருவொற்றியூரில் உள்ள அன்பாலயா சிறப்பு பள்ளியிலும், மணலி மண்டலத்துக்கு மணலி புதுநகர், பழையநாப்பாளையம் ஆப்பர்ச்சூனிட்டி சிறப்பு பள்ளியிலும்,மாதவரம் மண்டலத்துக்கு பெரம்பூர் மைத்ரி சிறப்பு பள்ளியிலும், தண்டையார்ப்பேட்டை மண்டலத்துக்கு அவ்வை காப்பகம் சிறப்புபள்ளியிலும், ராயபுரம் மண்டலத்துக்கு, பழைய வண்ணாரப்பேட்டை ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு-விலும் வழங்கலாம். அதேபோல், திருவிக மண்டலம்- பெரம்பூர் புத்துயிர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி, அம்பத்தூர் மண்டலம்- கிழக்குமுகப்பேர் வசந்தம் சிறப்புப் பள்ளி, அண்ணாநகர் மண்டலம்- அண்ணாநகர் மேற்கு 6-வது அவென்யூ விஸ்டம்லேனிங் சென்டர், தேனாம்பேட்டைமண்டலம்- டிஎம்எஸ் வளாகம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், கோடம்பாக்கம், ஆலந்தூர் மண்டலம்- கே.கே.நகர் புறநகர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாநில வள பயிற்சி மையத்தில் வழங்கலாம்.
வளசரவாக்கம் மண்டலம்- கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில் உள்ள விஜய் ஹியூமன் சர்வீஸ், அடையாறு மண்டலம் - செயின்ட் லூயிஸ் காது கேளாதோர் மற்றும் பார்வைத் திறன் குறைபாடுடையோர் சிறப்பு பள்ளி, காந்தி நகர், பெருங்குடி மண்டலம்- தரமணி சாலையில் உள்ள ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு, சோழிங்கநல்லூர் மண்டலம் - பாத்வே சிறப்புப் பள்ளி, காமராஜர் நகர், திருவான்மியூர் ஆகிய முகவரிகளில் சான்றுகளைச் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.