ஆசிரியா்-செவிலியா்கள் கோரிக்கைகள்: அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 09, 2023

Comments:0

ஆசிரியா்-செவிலியா்கள் கோரிக்கைகள்: அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

IMG_20230109_082915
ஆசிரியா்-செவிலியா்கள் கோரிக்கைகள்: அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

ஆசிரியா்கள், செவிலியா்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் ஆறு நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதன்பிறகே, அவா்களது கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.

இதேபோன்று, கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியா்களின் பணிக்காலமும் நிறைவடைந்ததால், பணி நிரந்தரம் கோரி அவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு பணி வழங்கும் போது அந்தப் பணியானது நிரந்தரம் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, ஆசிரியா்கள், செவிலியா்கள் ஆகியோருக்கு திமுக வாக்குறுதிகளை அளித்தது. அந்த வாக்குறுதிகளை இப்போது கால தாமதமின்றி நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84683412