தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்தவர்கள் சான்றிதழ் பெற அழைப்பு
சென்னை: தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்குமாறு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், தமிழக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையின்படி, 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி / என்ஏசி (NTC/ NAC) பெற்றவர்கள் 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி / என்ஏசி (NTC/ NAC) பெற்றவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022- ல் நடத்தபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ 28.02.2023 தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.