அரசு பள்ளியில் பிற மொழி கற்றுக்கொடுக்க வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 08, 2023

Comments:0

அரசு பள்ளியில் பிற மொழி கற்றுக்கொடுக்க வேண்டும்

அரசு பள்ளியில் பிற மொழி கற்றுக்கொடுக்க வேண்டும்!

'தமிழகத்திலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிப்பாடங்களை, விருப்ப பாடமாக கற்றுக்கொடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும்' என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்), கோவை மாவட்ட மாநாடு கோவை நவஇந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று துவங்கியது.

தீர்மானங்கள்

மாநாட்டின் முதல் நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

l மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் நடத்தப்படும் கிராமப்புற மாணவ மாணவியருக்கு பயன் அளிக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் துவங்க வேண்டும்.

l தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களை மேலும் சிறப்பான முறையில் நிர்வகித்து பராமரிக்கும் வகையில் தன்னாட்சி உரிமை கொண்ட தனி வாரியம் அமைப்பதோடு, வாரியத்தை நெறிமுறைப்படுத்த தக்கநிபுணர் குழு அமைப்பது அவசியம். l தமிழகத்திலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிப்பாடங்களை விருப்பபாடமாக கற்றுக்கொடுக்க, தமிழக அரசு முன் வர வேண்டும்.

l மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில், தமிழகத்துக்கு பொருத்தமான நல்ல அம்சங்களை அமல்படுத்துவது அவசியம். இது தமிழக மாணவர்கள், பிற மாநில மாணவர்களுடன் போட்டியிடுவதற்கு சரியானதாக இருக்கும்.

l தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி நீலகண்ட பிரம்மச்சாரி நீண்ட சிறைவாசத்தையும் பல கொடுமைகளையும் அனுபவித்தார். அவர் பிறந்த வசித்த வீடு இருக்கும் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா எருக்கூர் கிராமத்தில் நினைவுமண்டபம் அமைக்க வேண்டும்.

l கோவை, திருப்பூர் மாவட்ட தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கோவைக்கு பன்னாட்டு விமான சேவைகளை அதிகரிக்க, கோவை விமான நிலைய விரிவாக்கப்பணிகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டும்.

l கோவை - ராமேஸ்வரம் பயணிகள் விரைவு ரயிலை பொள்ளாச்சி, பழநி, மதுரை மார்க்கத்தில் இயக்க ரயில்வே அமைச்சகம் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews