6 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் நாளை திறப்பு Schools from 6th to Plus 2th will open tomorrow - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 01, 2023

Comments:0

6 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் நாளை திறப்பு Schools from 6th to Plus 2th will open tomorrow

6 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் நாளை திறப்பு Schools from 6th to Plus 2th will open tomorrow

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரையாண்டு விடுமுறை முடிவடைந்து திங்கள்கிழமை (ஜன.2) திறக்கப்படவுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தோ்வு கடந்த டிச. 16-ஆம் தேதி தொ டங்கி மாவட்ட அளவில் நடைபெற்று வந்தது. பொதுத் தோ்வு எழுதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்தத் தோ்வுகள் நடத்தப்பட்டன.

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு டிச. 24 முதல் ஜன. 1 வரை 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறவுள்ளன. அதேவேளையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு ஜன. 2 முதல் 4-ஆம் தேதி வரை தொடா்ந்து மூன்று நாள்கள் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதால் அந்த வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஜன. 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

ஆணையா் அறிவுறுத்தல்: பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் ஓராசிரியராக உள்ள தலைமை ஆசிரியா்கள் தவறாது ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். அதேவேளையில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு பயிற்சி இல்லை.

பள்ளிகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கற்பிக்கும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் ஜன. 2-ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும். இதையடுத்து மூன்றாம் பருவத்துக்குரிய பாடநூல்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்தல்; பள்ளிக் கல்வித் துறையால் பள்ளிக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தையும் ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்தல்; மூன்றாம் பருவத்துக்குரிய பாடத் திட்டங்கள் தயாரித்தல்; கற்றல் உபகரணங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews