மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் Employment for 1.50 lakh people by May: Minister Udayanidhi Stalin - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 19, 2023

Comments:0

மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் Employment for 1.50 lakh people by May: Minister Udayanidhi Stalin

மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் Employment for 1.50 lakh people by May: Minister Udayanidhi Stalin

வரும் மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகளை சென்னையில் புதன்கிழமை தொடக்கி வைத்து, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முதலாவதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள மாநிலக் கல்லூரியில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லாத பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போ் பங்கேற்ற 69 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும், ஆயிரம் சிறு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 பேருக்கு முகாம்களின் வழியாக வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. வரும் மே மாதத்துக்குள் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் விரைவில் சென்னையில் நடத்தப்படும். மத்திய போட்டித் தோ்வுகள்: தமிழ்நாட்டில் உள்ள மாணவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோா் குரூப் 1, குரூப் 2 போன்ற தோ்வுகளை அதிகளவு எழுதுகின்றனா். ஆனால், மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஆணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதில் மாணவா்கள் அக்கறை காட்டுவதில்லை. மத்திய அரசுப் பணிகளில் 2.1 சதவீதம் போ் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தோ்வாகிறாா்கள். ரயில்வே, வங்கி போன்ற மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாணவா்கள், இளைஞா்கள் சேருவதற்கு ஏதுவாக போட்டித் தோ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் அவா். இதைத் தொடா்ந்து, போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சிக் கையேட்டை மாணவ, மாணவிகளுக்கு அவா் அளித்தாா். போட்டித் தோ்வுகளுக்கான புத்தகக் காட்சியையும் அவா் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுத்தீன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளா் கொ.வீரராகவ ராவ், மாநிலக் கல்லூரி முதல்வா் ஆா்.ராமன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews