வடிவமைப்பு படிப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30 Design Courses – Last Date to Apply: 30th April
வடிவமைப்பு படிப்புகள்
மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் 1986ம் ஆண்டில் காலணி வடிவமைப்பிற்கு என்றே பிரத்யேகமாக, துவக்கப்பட்ட கல்வி நிறுவனம், ‘புட்வேர் டிசைனிங் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்’. நோக்கங்கள்:சர்வதேச தரத்திற்கு ஏற்ப இந்திய காலணி தொழில் துறையில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதையும், தகுதியான மனித வளத்தை உருவாக்குவதையும், காலணி மற்றும் அவை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்நிறுவனம் துவக்கப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ள இந்நிறுவனத்திற்கு, நொய்டா, பர்சத்கஞ்ச், சென்னை, கொல்கத்தா, ரோடக், ஜோத்பூர், சிந்த்வாரா, குணா, அங்கலேஷ்வர், பாட்னா, ஹைதராபாத், சண்டிகர் ஆகிய 12 நகரங்களில் கல்வி வளாகங்கள் செயல்படுகின்றன.
இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்ஷன்பி.டெஸ்., - லெதர், லைப்ஸ்டெயில் அண்டு புராடெக்ட் டிசைன்பி.டெஸ்., - பேஷன் டிசைன்படிப்பு காலம்: 4 ஆண்டுகள்
பி.பி.ஏ., - ரீடெய்ல் அண்டு பேஷன் மெர்சன்டைஸ்படிப்பு காலம்: 3 ஆண்டுகள்
முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்ஷன்எம்.பி.ஏ., - ரீடெய்ல் அண்டு பேஷன்
மெர்சன்டைஸ்படிப்பு காலம்: 2 ஆண்டுகள்
கல்வித்தகுதிகள்:இளநிலை பட்டப்படிப்புகளுக்கு, 12ம் வகுப்பில் தேர்ச்சி வேண்டும். உரிய அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமா படிப்பை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். எம்.டெஸ்., படிப்பில் சேர்க்கை பெற, புட்வேர், லெதர், டிசைன், பேஷன், இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்ஷர், டெக்னாலஜி, கவின்கலை போன்றவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ., படிப்பிற்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை முறை:
https://applyadmission.net/fddi2023 எனும் இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி வழி தேர்வாக மட்டுமே நடைபெறும் ஏ.ஐ.எஸ்.டி., தேர்வில் ஒரு மதிப்பெண் கொண்ட மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் இடங்கள் ஒதுக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30
விபரங்களுக்கு: www.fddiindia.com

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.