அரசு நூலகத்தில் ஆயுள்கால உறுப்பினராக 900 அரசுப் பள்ளி மாணவர்கள் 900 government school students with life membership in government library
அரசு நூலகத்தில் ஆயுள்கால உறுப்பினராக 900 மாணவர்கள்
கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 900 மாணவர்களும் கிள்ளை அரசு நூலகத்தில் ஆயுள்கால உறுப்பினராகச் சேர்க்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 74வது குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 300 மாணவர்களுக்கு நூலக ஆயுள்கால கட்டணத்தை ஆர்.எஸ். டிரஸ்ட் சார்பிலும் 600 மாணவர்களுக்கு கிள்ளைரவிந்திரன் சார்பிலும் கட்டணம் செலுத்தப்பட்டது. கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 900 மாணவர்களும் கிள்ளை கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பள்ளி தலைமையாசிரியர் பவானி தலைமை வகித்தார். பேரூராட்சிமன்ற தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அடையாளா அட்டையைப் பேரூராட்சி துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட நூலகர் சங்கர், கிளை நூலகர்கள் பால் ஜோன், இரா.அருள், கணேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாண்டியன், யாஸ்மின், மைதிலி, குமார், நிறைமதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மதுரச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.