122 அரசு துறை தேர்வுகளுக்கான கீ ஆன்சர் வெளியீடு: TNPSC தகவல்
122 அரசு துறை தேர்வுகளுக்கான கீ ஆன்சரை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 151 துறை தேர்வுகளை கடந்த 12.12.2022 முதல் 21.12.2022 (18.12.2022 நீங்கலாக) வரை கொள்குறிவகை, விரிந்துரைக்கும் வகை என்ற புதிய பாடத்திட்டத்தின்படி சென்னை மற்றும் டெல்லி உள்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடத்தியது. இத்தேர்வின் கொள்குறி வகை சார்ந்த 122 தேர்வுகளின் உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய கொள்குறி வகை தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் 9ம் தேதி (இன்று) முதல் 15ம் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பதாரர்கள் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Search This Blog
Tuesday, January 10, 2023
Comments:0
Home
Answer Key
Important announcement made by TNPSC
TNPSC DEPARTMENTAL EXAMINATION
122 அரசு துறை தேர்வுகளுக்கான கீ ஆன்சர் வெளியீடு: TNPSC தகவல்
122 அரசு துறை தேர்வுகளுக்கான கீ ஆன்சர் வெளியீடு: TNPSC தகவல்
Tags
# Answer Key
# Important announcement made by TNPSC
# TNPSC DEPARTMENTAL EXAMINATION
TNPSC DEPARTMENTAL EXAMINATION
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.