தனி தேர்வர் தத்கல் பதிவு இன்று துவக்கம்
சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுத விரும்பும் தனி தேர்வர்களுக்கு, தத்கல் விண்ணப்ப பதிவு, இன்று துவங்க உள்ளது.
நடப்பு கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்க உள்ளன.
இதில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்களுக்கு, கடந்த டிச., 26ல் விண்ணப்ப பதிவு துவங்கியது; நேற்று முன்தினம் முடிந்தது.
இந்த காலகட்டத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், இன்று முதல் வரும் 7ம் தேதி வரை, அரசு தேர்வுகள் துறையின் சேவை மையத்துக்கு சென்று, தத்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 1 தேர்ச்சி பெற்றவர், தேர்ச்சி பெறாதவர் மற்றும் தேர்வுக்கு வராதவர் அனைவரும், பிளஸ் 2 தேர்வு எழுதவும், பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதவும் விண்ணப்பிக்கலாம்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஐ.டி.ஐ., படித்தவர்கள், 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பாட தேர்வுகளுக்கும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐ.டி.ஐ., படித்தவர்கள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தமிழ், ஆங்கில பாட தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள, அரசு தேர்வுகள் இயக்குனரக சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களை,dge1.tn.gov.in/என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.