ஃபிரிட்ஜ் என்பது அனைவரின் வீட்டிலும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது.
அதன் முக்கியத்துவத்தை அறிந்த பலரும் அதை சரியான முறையில் பராமரிப்பதும் முக்கியம் என்பதை அறிய தவறுகின்றனர். எனவேதான் ஃபிரிட்ஜ் வெடிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே இனிமேலாவது விழிப்புடன் இருக்க இந்த விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
ஃபிரிட்ஜ் பராமரிப்பில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் :
ஃபிரிட்ஜ் பராமரிப்பில் கண்டென்சர் காயிலை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். தூசி அடைத்திருந்தாலும் ஃபிரிட்ஜின் செயல்பாடு குறையும். இதனால் கம்பிரசர் அதிக சூடாகி வெப்பத்தை வெளியேற்றும். இதை அறிய ஃபிரிட்ஜின் அருகில் சென்றாலே அதன் வெப்பத்தை உணரலாம். அப்படி உங்கள் ஃபிரிட்ஜிலும் அதிக வெப்பம் வருகிறது எனில் உடனே கண்டென்சரை பரிசோதனை செய்து மாற்றுவது அல்லது சுத்தம் செய்வது அவசியம்.
ஃபிரிட்ஜை சுவரை ஒட்டி வைக்கக் கூடாது. கண்டென்சர் காயில் வெளியிடும் வாயு எந்த தடையும் இன்றி வெளியேற வேண்டும். எனவே சுவற்றிலிருந்து சற்று இடைவெளி விட்டு வைக்க வேண்டும். எலி தொல்லை இருந்தால் கண்டென்சரை பாதுகாக்க வலை கட்டுவது நல்லது.
ஃபிரிட்ஜ் இருக்கும் இடத்தில் சரியான கிரவுண்ட் எர்த் அவசியம். எனவே 3 மாதங்களுக்கு ஒரு முறை ஃபிரிட்ஜ் பிளக் பாய்ண்டை பரிசோதனை செய்வது அவசியம். எர்த் லீக்கேஜ் சர்கியூட் பிரேக்கர் (ELCB) கருவி அதிகமாக மின்சாரம் பாய்வதை தடுக்கும் என்பதால் ஃபிரிட்ஜின் பிளக் பாய்ண்டை அதில் பொருத்தலாம். இதனால் அதிக எர்த் வராமல் பார்த்துக்கொள்ளலாம். எர்த் லெவல் அதிகமானாலும் இந்த கருவி ஃபிரிட்ஜை செயல்பாட்டை அணைத்துவிடும்.
உங்கள் வீட்டில் ஒயரிங் பிரச்சனை , அடிக்கடி மின்சார பழுது, மின்சாரம் ஏறி ஏறி இறங்கும், இப்படி ஏதேனும் பிரச்சனை இருப்பின் தற்காப்புக்கு ஃபிரிட்ஜ் அருகில் இரப்பர் மேட் போடுவது நல்லது. ஃபிரிட்ஜை திறக்கும்போது அந்த இரப்பர் மேட் மீது நின்றுகொண்டு திறந்தால் மின்சாரம் பாய்வதை தடுக்கலாம்.
ஃபிரிட்ஜ் பின்புறம் உள்ள பாக்ஸில் வெளியேறும் ஃபிரிட்ஜ் தண்ணீரை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். அந்த நீர் தானாகவே ஆவியாகிவிடும். இருப்பினும் நீண்ட நாட்களுக்கு தேங்காமல் பார்த்துக்கொள்ள சுத்தம் செய்துவிடுவது நல்லது.
மூன்று மாதத்திற்கு அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறை ஃபிரிட்ஜ் பழுது பார்ப்பது அவசியம். இதனால் தேவையற்ற விபத்துகளை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.