இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 31, 2022

Comments:0

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

13 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தராமல் இழுத்தடித்து வரும் அரசு அதனை மீட்டெடுப்பதற்காக தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வரும் SSTA-இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம். 2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க கோரி வரும் டிசம்பர் 27-ஆம் தேதி முதல் இடைநிலை பதிவுமூப்பு இயக்கம் (SSTA ) மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகின்றார்கள். இன்று இளையவர்களுக்கு தானே பாதிப்பு என்றால், நாளை மூத்தவர்களுக்கும் இதே போன்ற பாதிப்புகளை அரசு தைரியமாக ஏற்படுத்தும். ஆட்சி தான் மாறி உள்ளது. காட்சி இன்னும் மாறவில்லை. வலிமை மிக்க போராட்டங்களால் மட்டுமே இழந்த உரிமைகளை மீட்டெடுக்க முடியும், என்பதில் எந்தவித ஐயமும் இல்லாமல் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் வாழ்வாதாரமான அடிப்படை ஊதியத்தை இழந்து தவிக்கும் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் இனத்திற்கான போராட்டம் இது. அந்த ஒரு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் போராடும் போர்க்களம் அல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரிய இயக்கங்களிலும் உள்ள பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து களம் காணும் போராட்டமாகவே தெரிகிறது. இதற்கு முன்னர் வரலாறு காணாத பல்வேறு போராட்டங்களை இவர்கள் நடத்தி உள்ளார்கள். இப்போதும் உயிரை துச்சமென மதித்து கடும் குளிரிலும், மழையிலும் பலருக்கு உடல்நல குறைபாடு உள்ளபோதும் உதிரத்தை உரமாக்கும் கடுமையான தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

13 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை... எங்களுக்கும் வழங்கப்படவில்லை. ஆம். 01.06.2009 க்குப் பின் பணியில் சேர்ந்த எமது நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தான்... எங்களுக்கும் போராட்ட வழியைக் காட்டி இருக்கிறீர்கள்.... ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களும் உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாட்சப் குழுக்களிலும் சமூக வலைதளங்களிலும் காண முடிகிறது. உங்கள் போராட்டம் வெற்றி அடைய மனமார்ந்த நல் வாழ்த்துக்களை எழுச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் இந்த போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்து நடத்தி வரும் அன்பு நண்பர் ஜே.இராபர்ட், மாநில பொதுச்செயலாளர், SSTA-இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அவர்களுக்கும், ஏனைய மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும், 2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும், உண்ணாவிரதத்தில் பங்கு பெற்று வரும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் களம் கண்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் எழுச்சி கலந்த போராட்ட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews