வங்கிகளில் 710 சிறப்பு அதிகாரி காலி பணியிடங்கள் - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.11.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 03, 2022

Comments:0

வங்கிகளில் 710 சிறப்பு அதிகாரி காலி பணியிடங்கள் - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.11.2022


வங்கிகளில் 710 சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பல்வேறு வங்கி கிளைகளில் காலியாக உள்ள ஐ.டி. ஆபீசர், வேளாண் பீல்டு ஆபீசர், ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, எச்.ஆர், பணியாளர் அதிகாரி, மார்க்கெட்டிங் அதிகாரி என 710 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது வங்கி பணியாளர் தேர்வாணையம்(ஐபிபிஎஸ்) இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 710

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: I.T. Officer (Scale-I) - 44 
தகுதி: கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகியவற்றில் 4 ஆண்டு பொறியியல், தொழில்நுட்பப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Agricultural Field Officer (Scale I) - 516
தகுதி: வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், பால்வள அறிவியல், மீன்வள அறிவியல், மீன் வளர்ப்பு, வேளாண்மை ஆகியவற்றில் 4 ஆண்டு பட்டம். சந்தைப்படுத்தல், கூட்டுறவு - வங்கி, வேளாண்-வனவியல், வனவியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், உணவு அறிவியல், வேளாண் வணிக மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், வேளாண் பொறியியல், பட்டு வளர்ப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Rajbhasha Adhikarai (Scale I) - 25
தகுதி: ஹிந்தியில் முதுகலைப் பட்டம் அல்லது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடங்களுடன் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Law Officer (Scale I) - 10 
தகுதி: சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் (எல்எல்பி) பெற்று பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: HR/Personnel Officer (Scale I) - 15
தகுதி: இளங்கலைப் பட்டம் மற்றும் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பணியாளர் மேலாண்மை, தொழில்துறை உறவுகள், சமூகப் பணி, தொழிலாளர் சட்டம் ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Marketing Officer (Scale I) - 100
தகுதி: மார்க்கெட்டிங் பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது மார்க்கெட்டிங்கி பிரிவில் முழுநேர எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது மார்க்கெட்டிங்க் பிரிவில் இரண்டு ஆண்டு முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 21.11.2022 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சார்பார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டண்ததை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.11.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews