வங்கி நோட்டு அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மத்திய நிதி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பேங்க் நோட் பிரஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை டெக்னீசியன்(பிரிண்டிங்க்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 02/2022
பணி: Junior Technician (Printing)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.18,780 - 67,390
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் லித்தோ ஆஃப்செட் மெஷின் மைண்டர், லெட்டர் பிரஸ் மெஷின் மைன்டர், ஆஃப்செட் பிரிண்டிங், பிளேட்மேக்கிங், எலக்ட்ரோபிளேட்டிங், ப்ளேட் மேக்கர் கம் இம்போசிட்டர் ஆகிய பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://bnpdewas.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2022
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.