பகுதிநேர விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: அண்ணாமலை
பகுதிநேர விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பகுதிநேர முழுநேர தொகுப்பூதிய விரிவுரையாளா்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஆசிரியா்களுக்கு செய்யும் அநீதி. திமுக தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி இவா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பிற வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் ஏமாற்றியது போல இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றக்கூடாது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பகுதி நேர தகுதி பெற்ற, அனுபவம் பெற்ற விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்யாமல், புதிதாக ஆசிரியா் நியமனஆணையத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்போவதாக அரசு சொல்வது இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியா்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என அதில் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.