இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வெறும் 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கிடைக்கும்! - If you invest in this scheme you will get Rs.10 lakhs in just 3 years! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 01, 2022

Comments:0

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வெறும் 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கிடைக்கும்! - If you invest in this scheme you will get Rs.10 lakhs in just 3 years!

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வெறும் 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கிடைக்கும்! - If you invest in this scheme you will get Rs.10 lakhs in just 3 years!

எஸ்பிஐயில் 3 வருட எஃப்டிக்கு 6.10 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது, அதேசமயம் தபால் அலுவலகத்தில் 3 வருட டெபாசிட்டுக்கு 6.7% வட்டி கிடைக்கிறது.

வங்கிகளில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்த பாதுகாப்பை தருகிறது.

தபால் நிலையங்கள் அதிக வட்டியை தருகின்றன.

Unsav திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 6.60% வட்டி வழங்கப்படுகிறது.



பெரும்பாலான மக்கள் தங்களின் எதிர்கால நிதி தேவைகளை பூர்த்தி செய்திகொள்ள பல்வேறு முதலீடு திட்டங்களை தேர்வு செய்கின்றனர். இதற்கென்றே பல தனியார் வங்கிகள், அரசு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தபால் நிலையங்கள் பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகின்றன. ஆனால் இதில் எந்த நிறுவனத்தில் தங்களது பணத்தை முதலீடு செய்வது என்கிற குழப்பம் மக்களுக்கு இருந்து வருகிறது. முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பானதாக இருக்குமா, முதலீட்டின் மூலம் நிலையான வருமானம் கிடைக்குமா என பல கேள்விகள் முதலீட்டாளரின் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்போது வங்கிகளில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்த பாதுகாப்பையும், பலனையும் தருமா அல்லது தபால் நிலையங்களில் முதலீடு செய்வது உங்களுக்கு பாதுகாப்பையும், பலனையும் தருமா என்பது பற்றி விரிவாக காண்போம்.


ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் பிக்ஸட் டெபாசிட் என்றும், தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்படும் பணம் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் என்றும் அழைக்கப்படுகிறது. 1 முதல் 5 வருடங்கள் வரை போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம், இங்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு 5.5% வட்டி கிடைக்கும், அதேசமயம் 3 வருட முதலீட்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. தபால் அலுவலகத்தில் ரூ. 8,35,000 முதலீடு செய்தால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.10,19,000 கிடைக்கும். இதில் ரூ.1,84,194 வட்டி சேர்த்து மொத்தம் ரூ.10,19,194 கிடைக்கும்.

எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள Unsav திட்டத்தில் அக்டோபர் 28, 2022 வரை கணக்கைத் திறக்கலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு வருடத்திற்கு 6.10% வட்டி வழங்கப்படுகிறது, அதுவே மூத்த குடிமக்களுக்கு 6.60% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.8,35,000 முதலீடு செய்தால், 3 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.10 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். இதில் ரூ.1,66,000 வட்டி சேர்த்து மொத்தம் ரூ.10,01,296 கிடைக்கும். எஸ்பிஐயில் 3 வருட எஃப்டிக்கு 6.10 சதவிகிதம் வட்டியும், தபால் அலுவலக டெபாசிட்டுக்கு 6.7% வட்டியும் கிடைக்கிறது. இந்த இரண்டையும் வைத்து பார்க்கையில் எஸ்பிஐ வங்கி திட்டத்தில் முதலீடு செய்வதை காட்டிலும் தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்ததாக தெரிகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews