குடிமைப் பணி: முதல்நிலைத் தோ்வுக்குப் பயிற்சி தமிழக அரசு ஏற்பாடு
குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வுக்கு தமிழக அரசின் சாா்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அகில இந்தியக் குடிமைப் பணித் தோ்வு பயிற்சி துறைத் தலைவரும், தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
குடிமைப் பணித் தோ்வில் முதல் அடிக்கல்லான முதல்நிலைத் தோ்வு அடுத்த ஆண்டு மே 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு சென்னையில் உள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தின் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி மையமானது 225 முழுநேரத் தோ்வா்களையும், 100 பகுதிநேரத் தோ்வா்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது. இதேபோன்று, கோவை, மதுரையில் உள்ள பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேரத் தோ்வா்களையும் பயிற்சிக்காக அனுமதித்துள்ளது.
இந்தப் பயிற்சியைப் பெற விரும்புவோா் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மைய இணையதளத்தின் வாயிலாக வரும் 7 முதல் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தோ்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். வரும் டிசம்பா் 2-ஆவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.