PGTRB Exam மூலம் முதுகலை ஆசிரியர் நேரடி நியமனம் செய்யப்படுவதற்கு முன் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக்கோரி தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையருக்கு கடிதம்!
ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்திற்கு முன்னதாக 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தக்கோருதல்-சார்பு
2022-23 ஆம் கல்வி ஆண்டில், பள்ளிக்கல்வித்துறையின் பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர். சிறப்பாசிரியர் பணியிடங்கள் என சுமார் 13000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதனால் கற்றல் கற்பித்தல் நிகழ்வு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
TRB மூலம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு முன்னதாகவும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட ஆணை வெளியிட்ட பிறகு உள்ள பணியிடங்கள், கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டில் கூடுதல் மாணவர்கள் சேர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து கிடைக்கும் மொத்த பணியிடங்களுக்கும் இக்கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட வேண்டுகிறோம்.
கலந்தாய்வில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு முதல் முன்னுரிமையும், வெவ்வேறு இடங்களில் பணிபுரியும் கணவன் / மனைவி (SPOUSE) இருவருக்குமான முன்னுரிமையினை இரண்டாவதாகவும் வழங்கலாம் என்ற எங்களின் ஆலோசனையினை தங்களுக்கு தெரிவித்துக்கொள்வதோடு 01.01.2022 நிலவரப்படி உள்ள அனைத்து நிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு பட்டியலின்படி பதவி உயர்வு கலந்தாய்வினையும் உடன் நடத்த வேண்டும் எனவும் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.