தகைசால் பள்ளிகளின் சிறப்பம்சம் என்ன - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 07, 2022

Comments:0

தகைசால் பள்ளிகளின் சிறப்பம்சம் என்ன

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் தொடங்கப்படும் திட்டத்தை துவக்கி வைத்தனர். அந்த வகையில் 26 தகை சால் பள்ளிகளும் 15 மாதிரி பள்ளிகளும் புதிதாக தொடங்கப்பட உள்ளன. நடப்பு கல்வியாண்டு முதலே இந்த இரண்டு வகை பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட உள்ளது.

ஆயிரத்திற்கும் மேல் மாணவர்கள் கொண்ட அரசு பள்ளிகள் தகை சால் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன. அந்த வகையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், நவீன கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் ஒருங்கிணைந்த நூலகம், விளையாட்டு, கலைகள், இலக்கியம் என அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை நேரிடையாகவும் , இணைய வசதிகளை பயன்படுத்தியும் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டு, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்துகின்ற வகையில் தகைசால் பள்ளிகள் ஏற்படுத்தப்படும். அந்தவகையில் முதற்கட்டமாக திருவள்ளூர், சென்னை ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு , இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் , விழுப்புரம் ,தருமபுரி ,சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் , திண்டுக்கல் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள 1000த்துக்கும் மேல் மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தகைசால் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளது.

👉ஸ்மார்ட் வகுப்பறைகள்

👉விளையாட்டுப் பயிற்சிகள்

👉வாசிப்பு இயக்கம்

👉கலை , இசை , நாடகப் பயிற்சிகள்

👉உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்

👉கலையரங்கம்

👉ஆசிரியர்களுக்குப் பயிற்சி

👉படைப்பாற்றலை வளர்த்தல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews