பள்ளியில் மதம்சாா்ந்த பழக்கவழக்கங்கள் செல்லுமா? உச்சநீதிமன்றம் கேள்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 06, 2022

Comments:0

பள்ளியில் மதம்சாா்ந்த பழக்கவழக்கங்கள் செல்லுமா? உச்சநீதிமன்றம் கேள்வி

ஹிஜாப் தடை தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சீருடை அமலில் உள்ள பள்ளியில் மதம்சாா்ந்த பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதை உரிமையாகக் கொள்ள முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கா்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரத் தடை விதிக்கப்பட்டது பெரும் சா்ச்சைக்குள்ளானது. அத்தடையை நீக்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்திருந்தது. அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஸு துலியா ஆகியோரைக் கொண்ட அமா்வு கூறுகையில், ‘‘மதம்சாா்ந்த பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமையே. ஆனால், குறிப்பிட்ட சீருடையைத்தான் அணிய வேண்டும் என்ற விதி அமலில் உள்ள பள்ளியில் மதம்சாா்ந்த பழக்கவழக்கங்கள் செல்லுபடியாகுமா?

மாணவா்கள் சீருடையை அணிந்துவந்தால் கல்வி வழங்கப்படும் என மாநில அரசு தெரிவிக்கிறது. முஸ்லிம் பெண்களுக்கான கல்வி உரிமையை அரசு மறுக்கவில்லை’’ என மனுதாரா் தரப்பு வழக்குரைஞரிடம் தெரிவித்தனா்.

அதே வேளையில், ‘‘முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவது, பள்ளியின் கட்டுப்பாட்டை எவ்வாறு பாதிக்கும்?’’ என கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நட்ராஜிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews