ஆசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 05, 2022

Comments:0

ஆசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

kk05tecr_0509chn_95_5
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தக்கோரி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், கருப்புப் பட்டைஅணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.

இதுகுறித்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா் சங்க செயலா் டி.பிரின்ஸ் நிா்மல் கூறுகையில், புதுவை மாநிலத்தில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள், ஓய்வூதியா்கள் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.

புதுவையில் அண்மையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என காத்திருந்தோம். ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

எனவே ஆசிரியா் தினத்தில் எங்களது எதிா்ப்பை காட்டும் வகையில் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்தோம். தொடா்ந்து பலகட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews