அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்திறன் மதிப்பீடு: அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 14, 2022

Comments:0

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்திறன் மதிப்பீடு: அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதிசெய்ய, அனைத்து ஆசிரியர்களும் சுயமதிப்பீடு செய்து தங்களை மேம்படுத்திக் கொள்ள ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டது.

அதன்படி ஒவ்வோர் ஆசிரியரும் தங்கள் வகுப்பறை நிகழ்வுகளை வடிவமைத்து, மாணவர் கற்றல் அடைவு நிலையைமேம்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த செயல்திறன்களை ஒவ்வொரு ஆசிரியரும் அடைந்து, அதை முழுமையாகப் பின்பற்றுவதை சுயமாக மதிப்பீடு செய்ய,தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் மேலாய்வுக் குறிப்பு எழுதித்தர வேண்டும்.

சுயமதிப்பீட்டுக்கான வழிகாட்டுதல்களை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை ஆரம்ப நிலை முதல் மேல்நிலை வரை பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும். இதற்கான மாதிரிப் படிவங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆசிரியர் செயல்திறன் மதிப்பீட்டு பணிக்காக ரூ.30.23லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி, பள்ளிகளில் உள்ள இணையதள செலவினங்களுக்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews