அரசியல் ஆதாயத்துக்காக மாணவர்களின் எதிர்காலத்தில் திமுக விளையாடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், இந்த எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 1,32,167 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, கடந்த ஆண்டைவிட 10,572 மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு 31.965 ஆக உயர்ந்துள்ளது.
அகில இந்திய அளவில் பட்டியலின மாணவர்களில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் அதிகம்,
அதேபோல, பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நீட் தேர்வுக்கு முன்னர் சராசரியாக 31 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். நீட் தேர்வுக்குப் பின்னரும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய பின்னரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை திமுக அரசுகைவிட்டது ஏன்? அரசியல் ஆதாயத்துக்காக மாணவர்களின் எதிர்காலத்தில் திமுக விளையாடுகிறது.
எனவே, மீண்டும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், ‘கல்வித் தரத்தில் 2-ம் இடத்தில் உள்ள தமிழகம், நீட் தேர்ச்சி விகிதத்தில் 29-வது இடத்துக்கு தள்ளப்பட்டு, கல்வியில் தமிழகத்தைவிட பின்தங்கியுள்ள மாநிலங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்திருப்பது, நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதை வெளிப்படுத்திஉள்ளது.
எனவே, நீட் தேர்வால் இனி யாரும் தற்கொலை செய்துகொள்ளாத வகையில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீட் தேர்வு மறுசீராய்வு வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி தமிழக அரசு சட்டப் போராட்டம் மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.