01.07.2022 முதல் 4% அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு நிலுவைத்தொகையுடன் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு உடனே வழங்கிட வேண்டுதல் சார்பாக - On behalf of Tamil Nadu Govt Servant teachers requesting immediate payment of 4% discount from 01.07.2022 with advance date and balance
பெறுநர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச்செயலகம்,
சென்னை -600 009
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வணக்கம்.
பொருள் - 01.07.2022 முதல் 4% அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு நிலுவைத்தொகையுடன் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு உடனே வழங்கிட வேண்டுதல் சார்பாக
தங்களின் தலைமையிலான தமிழக(திமுக) அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுநாள் வரை தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு உரிய காலத்தில் முன் தேதியிட்டு வழங்கப்படவில்லை.இதனால் தங்கள் தலைமையிலான தமிழக (திமுக) அமைய வேண்டும் என வாக்களி்த்த தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்ர்கள் மிகுந்த வருத்தத்திலும் ஆதங்கத்திலும் உள்ளனர்.விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 01.07.2022 முதல் 4% அகவிலைப்படி உயர்வை முன்தேதியிட்டு அறிவித்துள்ளது.ஆகவே தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்ர்களுக்கும் 01.07.2022 முதல் 4% அகவிலைப்படி உயர்வை முன்தேதியிட்டு நிலுவைத்தொகையுடன். கால தாமதமின்றி அரசாணை வெளியிட்டு வழங்கிட தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை சார்பில் தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தங்கள் தலைமையிலான அரசு ,அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்ர்களின் நலன் காக்கும் அரசு என இன்னும் நம்புகிறோம்,ஆனால் தங்கள் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 1 1/2 ஆண்டு ஆட்சியில் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்ர்களின் அடிப்படை உரிமையான அகவிலைப்படி உயர்வு உரிய காலத்தில் தர மறுக்கப்பட்டதும் மற்றும் அகவிலைப்படி நிலுவைத்தொகை பறிக்கப்பட்டதும் நீங்காத வடுவாக எங்கள் உள்ளங்களில் இடம்பெற்றுவிட்டது. "தாமதிக்கப்பட்ட நீதி,மறுக்கப்பட்ட நீதியாகும்" எனும் முதுமொழியை தங்கள் தலைமையிலான ஆட்சி எங்களுக்கு உணர்த்தி வருகிறது.தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக விளங்கிடவும்,தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் அச்சாணியாகவும் விளங்கும், அயராது உழைக்கும் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களின் அடிப்படை உரிமையான அகவிலைப்படி உயர்வு 4% ஐ உடனே 01.07.2022 முதல் முன் தேதியிட்டு நிலுவைத.தொகையுடன் வழங்கிட தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை உரிய காலத்தில் வழங்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதையும்,அகவிலைப்படி நிலுவைத்தொகையினை பறிக்கும் செயலில் ஈடுபடவேண்டாம் எனவும் தங்களை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்
இவண்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை
மாநில அமைப்பு
என்றுமே விடியாத அரசு. அனைவருக்கும் பட்டை நாமம் போடும் அரசு.
ReplyDelete