வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு - Agriculture University Ranking List Publication
தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் இன்று (செப்.,30) வெளியிடப்பட்ட நிலையில், ஏழு மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 12 பி.எஸ்சி., பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கு, 6,980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன், 28ம் தேதி முதல் ஆக.,20 வரை பெறப்பட்டன. இந்நிலையில், இன்று பல்கலை வளாகத்தில் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தரவரிசைப்பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசு வேளாண் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையில் 2,567 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணைப்புக் கல்லூரிகளில், அரசு இட ஒதுக்கீட்டில் ஒற்றைச் சாளர முறையில், 2,868 இடங்களும், நிர்வாக இட ஒதுக்கீட்டின் மூலம், 1,545 இடங்கள் என, மொத்தம், 4,413 இடங்களும், தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு, 247 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 120 இடங்களும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 408 இடங்களும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு தலா, 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறப்பு இடஒதுக்கீட்டின்கீழ், 391 மாணவர்கள், அரசு பள்ளியில் பயின்ற, 7,773 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 144, தொழிற்கல்வி பிரிவில், 1,849, விளையாட்டு வீரர்கள் பிரிவில், 808 என, மொத்தம், 39 ஆயிரத்து, 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 15 ஆயிரத்து, 111 மாணவர்கள், 24 ஆயிரத்து, 378 மாணவியர் அடங்குவர்.
மொத்த விண்ணப்பதாரர்களில், பொதுப்பிரிவு, 1,226, பிற்பட்ட வகுப்பு, 13 ஆயிரத்து, 610, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 11 ஆயிரத்து, 915, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில், 794, பட்டியல் இனத்தவர் பிரிவில், 10 ஆயிரத்து 002, அருந்ததியர் பிரிவில், 1,346, பழங்குடியினர் பிரிவில், 596 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்நிலையில், தரவரிசைப்பட்டியலில், ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தலா இருவர், சேலம், ராமநாதபுரம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம், ஏழு பேர், 200-க்கு, 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, 199.5 மதிப்பெண் 14 பேரும், 199 மதிப்பெண்களை மூவரும் பிடித்துள்ளனர். மேலும், 195 மதிப்பெண்களுக்கு மேல், 513 பேர் எடுத்து உள்ளனர். கடந்தாண்டு, 161 பேர், 195 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் கட்-ஆப் 185.5 மதிப்பெண் வரை பெற்றவர்கள், தனியார் கல்லூரிகளில், 179 வரை கட்-ஆப் பெற்றவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில், சராசரியாக 181 மதிப்பெண் வரை கட்-ஆப் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மீடியத்தில் கடந்தாண்டு இரண்டு பிரிவுகளில் தலா, 40 இடங்கள் இருந்த நிலையில், தற்போது, 10 இடங்கள் அதிகரிக்கப்பட்டு 50 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகு வேளாண் பல்கலை கவுன்சிலிங் துவங்கும். ஆன்லைன் முறையில் கவுன்சிலிங் நடைபெறும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கவுன்சிலிங் தொடர்பாக யூடியூப் மூலம் தவறான தகவல் வெளியிட்டு வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல் தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலையின் அதிகாரபூர்வ தகவல்களை மட்டும் மாணவர்கள் நம்ப வேண்டும். யூடியூப் சேனல்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.