‘குரூப் - 1” தேர்வு மதிப்பெண் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 01, 2022

Comments:0

‘குரூப் - 1” தேர்வு மதிப்பெண் வெளியீடு

'குரூப் - 1' தேர்வில் பெண்களுக்கு முக்கியத்து வம் அளிப்பதாக எழுந்த சர்ச்சையால், மதிப்பெண் விபரங்களை, அரசு பணி யாளர் தேர்வாணைய மான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

அரசு துணை துறைகளில் கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட, குரூப்-1 பதவிகளில், 66 காலியிடங்களை நிரப்ப, 2021ல் முதல் நிலை தகுதி தேர்வு நடத் தப்பட்டது.

இதில், 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் பிர தான தேர்வுக்கு தகுதி பெற்ற, 3,800 பேரின் விப ரம் மட்டும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப் பட்டது. இந்த ஆண்டு மார்ச் 4, 5 மற்றும் 6ம் தேதி பிரதான தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூலை யில் வெளியாகின.

இதில், 137 பேர் நேர் காணலுக்கு தேர்வாகி, ஜூலை 15ல் நேர்காணல் நடத்தி, அதே நாளில் மதிப் பெண்கள் வெளியிடப்பட் டன. இதில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு, டி.என்.பி.எஸ். சி., அலுவலகத்தில் கவுன் சிலிங் நடத்தப்பட்டது.

பணி நியமனம் பெற் றவர்களில், 87 சதவீதம் பெண்கள். இதனால், தேர்வர்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. பெண் களுக்கான இட ஒதுக் கீடு இரட்டிப்பாக வழங்கப்பட்டு உள்ளதா கவும், ஆண் தேர்வர்கள் புறக்கணிக்கப்பட்டு உள் ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், குரூப் - 1 முதல்நிலை தேர்வு, பிர தான தேர்வு ஆகிய இரண் டிலும் பங்கேற்ற அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் விபரங்களையும், டி.என். பி.எஸ்.சி., வெளியிட்டுள் ளது. www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
IMG_20220901_133050

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews