TRB இன்று( 18.08.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 18, 2022

Comments:0

TRB இன்று( 18.08.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



ஆசிரியர் தேர்வு வாரியம்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம் 2020-2021

பத்திரிக்கைச் செய்தி

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 கணினிப் பயிற்றுநர் நிலை1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 2002.2022 வரை கணிணி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04,07-2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிக்கையின்போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ்வழியில் ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள். தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான ஆவணங்களை அரசாணை (நிலை) எண். 82, மனிதவள மேலாண்மை (எஸ்) துறை நாள் 16.08.2021 -ன் இணைப்பில் கண்ட படிவத்தில் அனைத்து ஆவணங்களையும் 1ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழில் பயின்றதற்கான சான்று, 11-12ஆம் வகுப்பு / டிப்ளமோ படிப்பு தமிழில் பயின்றதற்கான சான்று. இளங்கலைப் பட்டத்தினை (UG Degree) தமிழில் பயின்றதற்கான சான்று, முதுகலைப் பட்டத்தினை (PG Degree) தமிழில் பயின்றதற்கான சான்று. கல்வியியல் இளங்கலைப் பட்டத்தினை (B.Ed. Degree) தமிழில் பயின்றதற்கான சான்று மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை (BPEd. Degree மற்றும் MPEd.. Degree) கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று உரிய அலுவலரின் மேலொப்பத்துடன் பெற்று தயார் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு உரிய படிவத்தில் பெற்று வைத்திருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பத்தில் ஏற்கனவே, தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை 'ஆம்' என பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்படும்.

எனவே, மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இவ்விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இணையதளத்தில் உரிய மாதிரிப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட 2208.2022 முதல் 25.08.2022 பிற்பகல் 5 மணி வரை வாய்ப்பு அளிக்கப்படும். உரிய இணையதள முகவரி குறித்து பத்திரிக்கைச் செய்தி மற்றும் இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

நாள்: 18.08-2022

தலைவர்



CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews