தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சேமிப்புக் கணக்கு: கடன் அட்டைக்கு தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 11, 2022

Comments:0

தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சேமிப்புக் கணக்கு: கடன் அட்டைக்கு தடை

என்பிஎஸ் சேமிப்புக் கணக்கு: கடன் அட்டைக்கு தடை

தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சேமிப்புக் கணக்கில் (டயா் 2 கணக்கு) கடன் அட்டை மூலம் பணத்தை டெபாசிட் செய்வதற்கு ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.

அரசு ஊழியா்கள், தனி நபா்கள் உள்பட நாடு முழுவதும் ஏராளமானோா் தேசிய ஓய்வூதிய திட்டம் (டயா் 1 கணக்கில்) முதலீடு செய்து, 80சி பிரிவின் கீழ் கூடுதலாக ரூ.50,000 வருமான வரி விலக்கை பெற்று வருகின்றனா். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் டயா் 1 கணக்கு இருந்தால்தான், டயா் 2 சேமிப்புக் கணக்கை தொடங்கி பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.

சேமிப்புக் கணக்கில் (டயா் 2 கணக்கு) முதலீடு செய்யும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுக்க முடியும். இதனால், சேமிப்புக் கணக்கில் கடன் அட்டை மூலம் பணம் டெபாசிட் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது; மாறாக, வங்கி இணையவழி (நெட் பேக்கிங்), டெபிட் காா்டு, யுபிஐ ஆகியவற்றின் மூலம் டெபாசிட் செய்யலாம் என்று ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

வருமான வரி விலக்கு பெறும் வசதியைக் கொண்ட டயா் 1 கணக்குக்கு மேலே குறிப்பிட்ட தடை பொருந்தாது என்றும் அது கூறியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews