சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 21, 2022

Comments:0

சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

சுய தொழில் செய்ய விருப்பம் உள்ள ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ பொருளாதார திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆநிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2.00 இலட்சத்தில் இருந்து ரூ.3.00 இலட்சமாக உயர்த்தி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் அதிக எண்ணிக்கையில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயனடைய தாட்கோ இணையதளம் (On-line) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

தொழில் முனைவோர் திட்டம் (EDF - Entrepreneur Development Pragramme) தொழில் முனைவோர் திட்டம், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் (SEPY Self Employment Programme for youth), மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், (SEPY - Setting up Cinic)மூட நீக்கு மையம், இரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் (EA – Economic Assistance Self Help Group) ஆகியவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.

ஆதிதிராவிடர் இனத்தவராக இருப்பின் http://application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருப்பின் http://ast.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளத்தில் குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று (Smart Card), சாதி சான்றிதழ் (Community Certificate), வருமானச் சான்றிதழ் (Income certificate Below Rs.3,00,000)ஓராண்டுக்குள் பெற்றிருக்க வேண்டும்.
சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

ஆதார் அட்டை / வாக்காளர் அடையான அட்டை (Adhaar Card / Voters ID)இவிலைப்புள்ளி GSTIN எண்ணுடன் (Quotation with GSTIN No )இ திட்ட அறிக்கை (Project Report) & ஓட்டுநர் உரிமம் வாகணக் கடனுக்கு மட்டும் (License with Badge) & பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Photo),கல்வித் தகுதி சான்றிதழ் (TC Xerox) விண்ணப்பதாரர் கடன் கோரும் தொழிலில் முன்அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். (Experience Certificate), வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் (Bank pass Book first page) ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம் என்றும் வயது வரம்பு 18 முதல் 65 வரை ஆகும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தனத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews