ஆசிரியர்களின் கோரிக்கையை கேட்க ‘ஆசிரியர் மனசு’: வாக்குறுதி அளித்த அன்பில் மகேஷ்...! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 15, 2022

Comments:0

ஆசிரியர்களின் கோரிக்கையை கேட்க ‘ஆசிரியர் மனசு’: வாக்குறுதி அளித்த அன்பில் மகேஷ்...!

education-minister-anbil-mahesh-poyyamozhi-says-chief-minister-will-surely-fulfill-demand-of-teachers


ஆசிரியர் மனசு: ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் நிறைவேற்றுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒருமுறை எனது இல்ல விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சி ”ஆசிரியர்களுடன் அன்பில்” நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் கிடைத்துள்ளது என புதுக்கோட்டையில் ஆசிரியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொண்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எனக்காக ஆசிரிய பெருமக்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகதான் ஆசிரியர் மனசு பெட்டி எனது வீட்டிலும், அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

கடைக்கோடியில் வசிக்கும் ஆசிரியர்களும் தங்களின் கோரிக்கை மனுவினை மிக எளிதாக அளிக்க வேண்டும் என்பதற்காகதான் புதுக்கோட்டை நகரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளையும் அறிமுகம் செய்து வைத்தேன் asiriyarmanasu@gmail.com. aasiriyarkaludananbil@gmail.com.

மின்னஞ்சல்கள் மூலம் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கையினை அளிக்கலாம். ஆசிரியர்களின் கோரிக்கையை நிச்சயம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிறைவேற்றுவார்! மீண்டும் சந்திப்போம்! உரையாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84631515