''மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் முழுவதும் 1800 காலிப்பணியிடங்களை அரசியல் தலையீட்டால் கடந்த ஆட்சியை போலவே தி.மு.க., ஆட்சியிலும் நிரப்ப முடியவில்லை'', என, மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்க மாநில தலைவர் தமிழரசு குற்றம்சாட்டினார்.
ராமநாதபுரத்தில் நடந்த சங்க பொதுக்குழுவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:மத்திய கூட்டுறவு வங்கிகளில் 1800 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பணியாளர்கள் தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை. பலமுறை அறிவிப்பு வெளியிட்டும் அரசியல் வாதிகள் தலையீட்டால் நிரப்ப முடியவில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்த அதே நிலைதான் தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும் உள்ளது.
தமிழகத்தில் உள்ள 128 நகர வங்கிகளை மாவட்ட வாரியாக ஒருங்கிணைக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கியாக அறிவிக்க வேண்டும். ஊதிய உயர்வு குறித்து ஆக. 24 முதல் தொடர் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்.இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும், என்றார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.