ஆசிரியர் கற்பித்தலை பார்வையிட தலைமை ஆசிரியருக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 31, 2022

1 Comments

ஆசிரியர் கற்பித்தலை பார்வையிட தலைமை ஆசிரியருக்கு உத்தரவு

அரசு பள்ளிகளில் தினமும் குறைந்தபட்சம், நான்கு ஆசிரியர்களின் வகுப்பறை கற்பித்தலை, தலைமை ஆசிரியர் பார்வையிட்டு பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அரசு பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தலைமை ஆசிரியர், தினமும் குறைந்தபட்சம், நான்கு ஆசிரியர்களின் வகுப்பறை கற்பித்தலை பார்வையிட்டு, அதன் விபரத்தை, 'வகுப்பறை உற்று நோக்கல்' பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.வகுப்பு, பாட வாரியாக பயிற்சி ஏடுகள் முறையாக திருத்தப்பட்டுள்ளதா என்பதை பார்த்து கையொப்பமிட வேண்டும்.

பள்ளி வளாகம், சத்துணவுக் கூடம், குடிநீர் தொட்டி, கழிப்பறை, மைதானம் ஆகியவற்றை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.பள்ளிகளில் பெற்றோர் கூட்டம் நடத்தி, மாணவர் நலன்சார்ந்த செயல்பாடுகளை, பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். பள்ளி சார்ந்த அனைத்து விபரங்களையும் தலைமை ஆசிரியர்கள் முழுமையாக அறிந்து வைத்திருப்பது அவசியம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

1 comment:

  1. நீங்க செய்ய கூடிய எந்த வழிமுறையும் டீச்சர்ஸ் நிம்மதிய சோதிக்கற மாதிரி இருக்கு மாணவரோட அடைவுத்திறனை வெச்சு ஒரு ஆசிரியர் எப்படி நடத்துவாங்கன்னு கண்டு பிடிக்கலாம் எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews