கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச சேர்க்கைக்கான மாணவர் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை, கல்வி கட்டணமின்றி மாணவர்கள் படிக்கலாம்.எல்.கே.ஜி.,யில் சேர்க்கப்படும் மாணவர்கள், ஒரே பள்ளியில் 8ம் வகுப்பு வரை படிக்கும்போது, இந்த சலுகையை பெற முடியும். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்து, அந்த கட்டணம் அரசின் சார்பில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை, ஒவ்வொரு மாணவருக்கும், 12 ஆயிரத்து 76 ரூபாய்; 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, 15 ஆயிரத்து 711 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகையானது, கடந்த முறை நிர்ணயித்த தொகையை விட குறைவு. கடந்த ஆண்டைவிட, 382 ரூபாயில் இருந்து 1,395 ரூபாய் வரை கல்வி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால், இலவச திட்டத்தில் மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகள் அதிருப்தி அடைந்துள்ளன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.