-இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கின் முதல் நாளில், அரசு பள்ளி மாணவர்கள், ௫7 பேர் இடங்கள் பெற்று உள்ளனர்.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 443 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, 1.58 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங் நேற்று முன்தினம் துவங்கியது. முதற்கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு கவுன்சிலிங் நடந்தது.இதில், 130 மாணவர்கள் பங்கேற்று, ஆன்லைனில் விருப்ப பதிவு செய்தனர். அவர்களின் விருப்பப்படி, நேற்று இடங்கள் ஒதுக்கப்பட்டு, ஆன்லைனில் உத்தரவு வழங்கப்பட்டன.
இதன்படி, மாற்றுத் திறனாளிகள், 21; விளையாட்டு பிரிவில், 34 மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவில், 2 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றனர்.இதையடுத்து, சிறப்பு பிரிவில் உள்ள அரசு பள்ளி ஒதுக்கீடு இல்லாத பிரிவினருக்கு, 'சாய்ஸ் பில்லிங்' வசதி நேற்று துவங்கியது. இன்று இரவு, 7:00 மணிக்குள் தங்களுக்கான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கான பதிவு முடிகிறது. இதில், 2,426 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று பதிவு செய்வோருக்கு, நாளை காலை, 8:00 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். அதை நாளை இரவு, 7:00 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.உறுதி செய்தவர்களுக்கு, நாளை மறுநாள் காலையில், இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது. இதையடுத்து, 25ம் தேதி பொது கவுன்சிலிங்கின் முதல் சுற்று துவங்க உள்ளது. கவுன்சிலிங் தொடர்பான சந்தேகங்களுக்கு, 1800- 425-0110 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.