45 மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளில் பட்டியல்/பழங்குடியினர்களில் தலா ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
மத்தியக் கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணியிட இடஒதுக்கீடு பின்பற்றுவது குறித்து சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஷபிகுர் ரஹ்மான் பார்க் மக்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சர் எழுத்து மூலம் பதில் அளித்தார்.
கேள்வி: மத்தியக் கல்வி நிலையங்களில் பின்தங்கிய வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறதா?
மொத்த ஆசிரியர் பணியிட நியமனத்தில் (பேராசிரியர், இணை பேராசிரியர், துணை பேராசரியர்) பட்டியல்/ பழங்குடியின/இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை என்ன?
பதில்: 2019 வருட மத்திய கல்வி நிலையங்கள் (ஆசிரியர் பணியில் இடஒதுக்கீடு) அவசரச் சட்டத்தின் கீழ், ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுகிறது. ஆசிரியர் நியமனம்:
ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்தில் ஆதிபட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முழு பிரதிநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என மத்திய கல்வி நிலையங்கள் (ஆசிரியர் பணியில் இடஒதுக்கீடு) அவசரச் சட்டம் தெரிவிக்கிறது. அதன்படி, பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் முறையே 15%, 7.5%, 27% என்ற அளவில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், மத்திய பல்கலைக்கழகங்களில் 4% ஓபிசி பிரிவினர் மட்டுமே பேராசிரியர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, பணியமரத்தப்பட்ட 1005 பேராசிரியர்களில், வெறும் 41 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினர். அதேபோன்று, எஸ்டி, எஸ்சி பிரிவினர் எண்ணிக்கை 1.4%, 6.8% என்ற அளவில் குறைந்து உள்ளது. மறுபுறம், உதவி பேராசிரியர் பணியில், எஸ்சி, ஓபிசி பிரிவினர் ஒப்பீட்டளவில் அதிக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளனர்.
2. கேள்வி: மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிகளில் பட்டியல்/ பழங்குடியின/இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை என்ன?
பதில்: 45 மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளில் பட்டியல் சாதியில் ஒருவரும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினரில் ஒருவரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஏழு பேரும் உள்ளதாக அமைசச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.
கல்வியாளர்கள் கருத்து:
இடஒதுக்கீடு மூலம் அனைத்து பின்தங்கிய வகுப்பினரில் இருந்து ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டால் உயர்கல்வி நிலையங்களில் கற்பித்தல் தரம் மேம்படும் என்ற நோக்கத்துடன் ஆசிரியர் பணியில் இடஒதுக்கீடு) அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்ட வில்லை என்பது கல்வி அமைச்சகம் அளித்த தரவுகள் தெரிவிப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.