TRB Polytechnic Lecture - சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 12, 2022

Comments:0

TRB Polytechnic Lecture - சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியம் , சென்னை .06 பத்திரிக்கை செய்தி 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணித்தெரிவு செய்வது சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை ( அறிவிக்கை எண் .14 / 2019 ) 27.11.2019 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு , கணினி வழித் தேர்வுகள் ( CBT ) 08 : 122021 முதல் 13 : 12 : 2021 வரை நடத்தப்பட்டு , தேர்வு முடிவுகள் 08.032022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 11.03.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில் , பணிநாடுநர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் தொடர்பான கூடுதல் சான்றிதழ்களை / ஆவணங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக 11.03.2022 முதல் 0104,2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்களின் அடிப்படையில் பணிநாடுநர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு , அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 பாடப்பிரிவுகளுக்கு 1 : 2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு , ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது .

அதன் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது . தற்பொழுது , முதற்கட்டமாக Textile Technology , Production Engineering , Printing Technology , Physics , Chemistry , English மற்றும் Mathematics ஆகிய பாடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு 16.07.2022 தேதியில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . மற்ற பாடங்களுக்கு 17.07,2022 மற்றும் 18.07.2022 தேதிகளில் நடத்தப்படும் , பாடங்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படும். பணிநாடுநர்களுக்கான அழைப்புக் கடிதம் மற்றும் ஆளறிச் சான்றிதழ் படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . பணிநாடுநர்கள் தங்களது அழைப்புக் கடிதம் மற்றும் ஆளறிச் சான்றிதழ் படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து 14,07.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் பணிநாடுநர்களுக்கு தகவல் அளிக்கப்படும் . அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிநாடுநர்கள் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மற்றும் பத்திரிக்கைச் செய்தியினை தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews