Provident Fund Withdrawal | நோய்க்கு சிகிச்சை தரும் வகையில், அரசு அல்லது பொதுத்துறை பிரிவு (PSU) அல்லது CGHS செய்யப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் இந்த தொகையை பெறலாம்.
தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்களை மருத்துவ அவசரநிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, அவர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறிப்பிட்ட ஒரு பகுதி தொகையை திரும்பப் பெற அனுமதிக்கிறது.
மருத்துவமனை சான்றிதழ்களை வழங்கிய பின்னரே இந்த தொகையை திரும்பப் பெற முடியும் என்று இருந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதுள்ள விதிகளில், EPFO உறுப்பினர்கள் மருத்துவ உதவிக்காக தங்கள் வருங்கால வைப்பு நிதி முன்பணமாக ₹1 லட்சம் வரையில் மருத்துவமனை ஆவணங்களின்றி பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.
CS(MA) விதிகள் அல்லது மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே இது சாத்தியமான ஒன்றாகும். நோய்க்கு சிகிச்சை தரும் வகையில், அரசு அல்லது பொதுத்துறை பிரிவு (PSU) அல்லது CGHS செய்யப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் இந்த தொகையை பெறலாம். ஆனால் தனியார் மருத்துவமனையை பொறுத்தவரையில், இறுதிப் பணப்பரிமாற்றத்திற்கு முன்பாக EPFO-ன் தகுதிவாய்ந்த அதிகாரிகள் சரிபார்த்த பின்னரே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ காலத்தில்அவசர உதவிக்காக PF பணத்தை பெறுவது எப்படி?
* EPFO போர்டல், epfindia.gov.in இல் உள்நுழைந்து, கேப்ட்சா (capsa) விவரங்களை சரிபார்க்கும் முன், உங்கள் கணக்கு எண் (UAN) மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி Log in செய்யவும்.
* அதில் Online services பகுதியில் Claim ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* பின் அந்த பக்கத்தில் கேட்கப்படும் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். பின்னர் வங்கிக் கணக்கு எண்ணை பதிவிடவும்.
* வங்கிக் கணக்கு எண் சரிபார்க்கப்பட்ட பின் ‘Proceed for Online claim' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* அதில் PF Advance ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் பணம் எடுப்பதற்கான காரணத்தில் 'Outbreak of pandemic' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* எவ்வளவு தொகை வேண்டும் என்பதை பதிவிட்டு, காசோலை நகலை அப்லோடு செய்து, முகவரியை பதிவிடவும். பின்னர் மொபைலுக்கு ஒரு OTP வரும் அதையும் பதிவிடவும். இதன்பின் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் ஒரு வேலை நாளில் சமர்ப்பிக்கப்பட்டால், அடுத்த நாளின் இறுதிக்குள் பணம் செலுத்தப்படும்.தகவல்கள் சரியாக இருந்தால் வங்கிக் கணக்குக்கு பணம் விரைவில் வந்துவிடும்.
குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புப்படி, மருத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட தொகையை EPFO உறுப்பினரின் சம்பளக்கணக்கிலோ, சிகிச்சை மேற்கொள்ளப்படும் மருத்துவமனையிலோ திரும்பப் பெறலாம்.
நோயாளி முன்கூட்டியே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், ஊழியர் மருத்துவக் கட்டணங்களுக்கான சான்றிதழ்களை 45 நாட்களுக்குள் EPFO விடம் சமர்ப்பித்தால் மட்டுமே PF திரும்பப் பெறும் வசதியைப் பெற முடியும்.
வேறுபிற காரணங்களுக்காக ஆன்லைனிலில் தங்கள் PFஐ பணியாளர்கள் மிக எளிதாக திரும்பப் பெற EPFO இன் உறுப்பினர் e-SEW போர்டலை பயன்படுத்தலாம்.
பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அவர்களின் PF இல் உள்ள மொத்த சேமிப்பு தொகையையும் திரும்பப் பெறலாம். ஆனால் ஓய்வு பெறுவதற்கு முன்பே, ஒரு பகுதியளவு தொகையை திரும்பப் பெறுவது சாத்தியம்.
வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறுவதற்கான முக்கிய விவரங்கள் :
PF கணக்கிலுள்ள பணத்தை பெற, ஒருவரின் ஆதார் அட்டையை உலகளாவிய கணக்கு எண்ணுடன் (UAN) இணைப்பது முக்கியம். இது EPFO இணையதளம் மூலமாக அல்லது UMANG மொபைல் app மூலமாக ஆன்லைனில் இணைக்கலாம்
PF திரும்பப் பெறுவதற்கு முன் உங்களின் KYC யை படித்து அறிந்து கொண்டு, அதை நிறைவு செய்து சமர்பிப்பது மிகவும் முக்கியம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.