திருவள்ளூர் அருகே விடுதியில், பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில், பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியின் விடுதியில் 12-ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் நண்பர்களுடன் உணவு அருந்த சென்ற பின்னர் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. முன்னதாக இன்று காலை பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து ஆயத்தமானதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மாணவியின் மரணம் குறித்து பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் பெற்றோரும் உறவினர்களும், கிராம மக்களும் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மேலும் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்துகளை சிறைபிடித்து மறியல் நடத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி விடுதியில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.