சமூக வலைதளத்தில் வருமானம் ஈட்டினால் வரி பிடித்தம்.. புதிய வரி விதிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 04, 2022

Comments:0

சமூக வலைதளத்தில் வருமானம் ஈட்டினால் வரி பிடித்தம்.. புதிய வரி விதிப்பு

சமூக வலைத்தளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, 10% TDS பிடித்தம் செய்யப்படும் என்று புதிய விதி அமலுக்கு வந்துள்ளது

இந்தியாவில் வருமான வரியை பொறுத்தவரை குறிப்பிட்ட வரம்புக்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் அதற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் உள்ளது. தனி நபர் வருமானம், சம்பளம் வாங்குபவர், நிறுவனங்கள் என்று ஒவ்வொரு வகையான வருமானத்துக்கும் வரி செலுத்த வேண்டும். அந்த வகையில், சமூக வலைத்தளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, 10% TDS பிடித்தம் செய்யப்படும் என்று புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட வரம்புக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்துகிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். எனவே, வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வருமானம் வழங்கும் நிறுவனங்கள் வரி பிடித்தம் செய்து கொண்டு மீதமுள்ள தொகையை தான் வழங்கும் பழக்கம் நாடு முழுவதும் உள்ளது. பிடித்தம் செய்யப்படும் தொகையை, நிறுவனம் / ஊதியம் வழங்குபவர் செலுத்தி விடுவார்.

உதாரணமாக ஒரு நபர் ஆண்டுக்கு ₹5,00,000 சம்பளம் வாங்குகிறார் என்றால் ஆண்டுக்கு அந்த நபர் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனமே கணக்கிட்டு அந்த தொகையை மாதா மாதம் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையாக பிடித்தம் செய்து, TDS செலுத்தி அதற்கான சான்றிதழை ஆண்டு இறுதியில் வழங்குவார்கள். இதுதான் TDS என்று கூறப்படும் டாக்ஸ் டிடக்டட் அட் சோர்ஸ் என்று கூறப்படுகிறது. ஏதேனும் காண்ட்ராக்ட், professional கட்டணம் அல்லது சேவைகளுக்கு வெகுமதி பெற்றுக்கொள்ளும் போதும் 10 சதவிகிதம் முதல் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகைதான் வழங்கப்படும். எந்த துறையில் பணியாற்றி அதற்கான வருமானம் வழங்கப்படுகிறதோ அதற்கு ஏற்ற அளவுக்கு வருமான வரி சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பலரும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கி விட்ட நிலையில் அவ்வாறு வருமானம் ஈட்டுபவர்கள் முறையாக வரி செலுத்துகிறார்களா என்ற கண்காணிப்பு தேவைப்படும் ஒரு சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இன்ஃப்ளூயன்ஸர்கள் என்று கூறப்படும் நபர்கள் ஈட்டும் பணத்துக்கு இனி டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பை வருமான வரி துறை வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews