மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்கு நடத்தப்படும் கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. குறுகிய இடைவெளியில் அட்டவணை வெளியிடப்பட்டதற்கு மாணவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உயர்க்கல்வித்துறையின் கீழ் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானிய குழு ஏற்கனவே அறிவித்தது.
மேலும் ஆர்வமுள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் உயர்க்கல்வி நிறுவனங்கள் ஆகியவையும் இதில் இணைந்து கொள்ளலாம் என்றும் கூறியது. ஆங்கிலம், இந்தி, கனடா, உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 10 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் நாடு முழுவதும் 544 மையங்களில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் தேசிய தேர்வு முகமையின் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் ஹால்டிக்கெட் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒரே நேரத்தில் பார்வையிட முயன்றதால் இணையதளத்தில் தாமதம் ஏற்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Search This Blog
Tuesday, July 12, 2022
Comments:0
Home
CUET
CUET (UG) 2022
CUET Entrance Exam
CUET exam
exam dates
Exam Schedule Released
NTA
அட்டவணை
நுழைவுத்தேர்வு
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை CUET நுழைவு தேர்வுக்கு ஏற்பாடு: தேர்வு அட்டவணையை வெளியீடு - NTA
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை CUET நுழைவு தேர்வுக்கு ஏற்பாடு: தேர்வு அட்டவணையை வெளியீடு - NTA
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.